தல அஜித்தின் 50 ‘வது பிறந்தநாள் ஸ்பெஷல் ரிலீசா வலிமை !?

தல அஜித்தின் 50 ‘வது பிறந்தநாள் ஸ்பெஷல் ரிலீசா வலிமை !?

அஜித் – எச்.வினோத் கூட்டணி இரண்டாவதாக ‘வலிமை’ படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படத்தில் அஜித், ஈஸ்வரமூர்த்தி எனும் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து அஜித் இரண்டாவது முறையாக எச்.வினோத் உடன் கூட்டணி அமைத்து ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். ‘வலிமை’ படம் ரேஸிங் கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தல அஜித்தின் 50 ‘வது பிறந்தநாள் ஸ்பெஷல் ரிலீசா வலிமை !?

தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் இப்படம் ஜனவரி மாதத்திற்குள் நிறைவு பெற்று 2020 மே மாதம் 1ம் தேதி அஜித் பிறந்தநாள் அன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியிருந்தது.ஆனால் படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளின் வேலைகள் அதிகமாக உள்ளதால் படம் அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி ரிலீஸ் ஆகாமல், தாமதமாகும் என படக்குழுவினர் தெரிவித்து ரசிகர்களை அமைதி காக்கும்படி அறிவுறுத்தி இருந்தனர்.

தல அஜித்தின் 50 ‘வது பிறந்தநாள் ஸ்பெஷல் ரிலீசா வலிமை !?

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி படத்தில் இன்னும் 20 சதவீத வேலைப்பாடுகள் மட்டுமே இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் படவெளியீட்டை அஜித் பிறந்தநாள் அன்றே எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை தல ரசிகர்களிடையே நிலவி வருகிறது. மேலும் இது அஜித்தின் 50 வது பிறந்தநாள் என்பதால் கூடுதல் ஸ்பேஸிலாக பார்க்கப்படுகிறது.

Share this story