அக்ஷய் குமார் என்னிடம் தமிழ் வார்த்தைகள் கற்றுக் கொண்டார்: நடிகர் தலைவாசல் விஜய்!

அக்ஷய் குமார் என்னிடம் தமிழ் வார்த்தைகள் கற்றுக் கொண்டார்: நடிகர் தலைவாசல் விஜய்!

பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமார் நடித்துள்ள ‘பெல்பாட்டம்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அக்ஷய் இந்தப் படத்தில் சீக்ரட் ஏஜென்டாக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஸ்கட்லாண்ட் நாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்விற்குப் பின் வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட முதல் படமும் இது தான். பெல்பாட்டம் படத்தின் தலைவாசல் விஜயும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது பெல்பாட்டம் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள அவர் சென்னையில் வந்தடைந்துள்ளார்.

அக்ஷய் குமார் என்னிடம் தமிழ் வார்த்தைகள் கற்றுக் கொண்டார்: நடிகர் தலைவாசல் விஜய்!

பெல்பாட்டம் படத்தின் அனுபவங்களை தலைவாசல் விஜய் பகிர்ந்துள்ளார்.

“நாங்கள் படப்பிடிப்பிற்குச் செல்லும்போது கையில் வாட்ச் ஒன்றை அணிந்து கொள்வோம். அது இதயத்துடிப்பு, ஆக்சிஜன் லெவல், ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை உள்ளிட்ட அனைத்தையும் கணக்கிடும். மேலும் படப்பிடிப்பு நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் மாஸ்க் அணிந்து தான் இருப்போம். எங்களைப் பார்க்க யாருக்கும் அனுமதி கிடையாது.

நான் ஹோட்டல் வளாகத்திற்குள் வழக்கமாக வாக்கிங் செல்வேன். நோய் எதிர்ப்பு சக்தி அளவை உயர்த்துவதற்காக வழக்கமாக கடுக்கை போடி மற்றும் மிளகு சாப்பிட்டு வந்தேன். எங்களுக்கும் ஒரு தொடக்க மருத்துவர் இருந்தார். எங்களுடைய படப்பிடிப்பு தளத்தில் எப்பொழுதும் ஒரு டாக்டர் இருப்பார். படப்பிடிப்பு செட் முழுவதும் தினமும் சானிடேஷன் செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

அக்ஷய் குமார் என்னிடம் தமிழ் வார்த்தைகள் கற்றுக் கொண்டார்: நடிகர் தலைவாசல் விஜய்!

மேலும் அவர் அக்சய்குமார் குறித்து கூறியபோது “அவர் காலையில் வழக்கமாக உடற்பயிற்சி செய்த பின் முதல் ஆளாக செட்டிற்கு வந்துவிடுவார். என் குழந்தைகள் நீச்சல் விளையாட்டு சாம்பியன்கள் என்று நான் அவரிடம் சொன்ன போது ஆச்சர்யமடைந்தார். அவரைப் பற்றி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்னவென்றால், அவர் நமக்கு வசதியாக அவரை மாற்றிக்கொள்வார். எனது முதல் ஷாட்டின் போது எப்போதும் என் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் இருக்கும். இந்த படமும் அதற்கு விதிவிலக்கல்ல. அக்‌ஷய் குமார் செட்களில் விளையாட்டுத்தனமாக சேட்டைகள் செய்வார். அவர் என்னிடம் சில தமிழ் சொற்களைக் கற்றுக்கொடுக்கச் சொன்னார். அதையடுத்து முழு செட்டும் சிரிப்பாக மாறியது. மறுபுறம், லாக்டவுனின் போது நான் என் மனைவியிடமிருந்து சிறிய இந்தி வார்த்தைகளைக் கற்றுக் கொண்டேன். அதற்காக அக்ஷய் என்னை பாராட்டினார்” என்றும் தெரிவித்தார்.

Share this story