தலைவி படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு!
தலைவி படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா மீண்டும் வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. அதனால் பல மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றனர். அதில் முக்கியமாக தியேட்டர்களில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி என்று மீண்டும் தெரிவித்துள்ளனர்.
இதனால் மீண்டும் திரைப்படங்கள் ஓடிடி-களை நோக்கி நகரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா நடிப்பில் உருவாகியிருந்த தலைவி திரைப்படம் ஏப்ரல் 23-ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தலைவி திரைப்படம் படம் பல மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளதால், ஒரே நாளில் எல்லா மொழிகளிலும் வெளியிட விரும்புகிறோம். ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் ஆபத்து இருப்பதால், அடுத்தடுத்த முன்னெச்சரிக்கைகள் மற்றும் லாக்டவுன் மீண்டும் அமலாகி வருகிறது. நாங்கள் ஏப்ரல் 23 ஆம் தேதி எங்கள் படத்தை வெளியிடத் தயாராக இருந்தாலும், அரசாங்க விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அனைத்து ஆதரவையும் வழங்க விரும்புகிறோம். மேலும் தலைவி படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்” என்று படக்குழுவினர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் புதிய வெளியீட்டு தேதியை அவர்கள் குறிப்பிடவில்லை. மீண்டும் இயல்வு நிலை திரும்பியவுடன் படத்தின் ரிலீஸ் குறித்து தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.