எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் தலைவி படக்குழுவின் சர்ப்ரைஸ்!
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி தலைவி படக்குழு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இதனால் #Thalavi ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகின்றது.
மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக இயக்குனர் ஏ.எல்.விஜய் உருவாக்கி வருகிறார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்தசாமியும், ஜானகி கதாபாத்திரத்தில் நடிகை மதுபாலாவும் நடிக்கின்றனர். சசிகலா கேரக்டருக்கு ப்ரியாமணி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.
தமிழ். தெலுங்கு. இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு கொரானா பிரச்சனையால் நிறுத்தப்பட்டது. பின்னர் சென்னை, ஹைதாராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.
ஏற்கனவே எம்.ஜி.ஆரின் நினைவுநாளையொட்டி எம்.ஜி.ஆர் முதல்வராக பதவியேற்கும் லுக்கில் நடிக்கும் அரவிந்தசாமியின் புகைப்படம் வெளியிடப்பட்டது. இதில் அரவிந்தசாமி, எம்.ஜி.ஆர் போன்றே இருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் எம்.ஜி.ஆரின் 104வது நினைவுநாளையொட்டி, தலைவி படக்குழு, புதிய படத்தை வெளியிட்டுள்ளது. இதில் அரவிந்தசாமியும், கங்கனாவும் பாடல் காட்சியில் தோன்றும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து #Thalaivi ஹேஷ்டேக் சமூகவலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.