ஜெயலலிதாவின் வாழ்க்கைப் படமான ‘தலைவி’ ரிலீஸ் தேதி உறுதி!?
இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி படம் மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
றைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை தலைவி என்ற பெயரில் உருவாகி வருகிறது. அப்படத்தை இயக்குனர் ஏஎல் விஜய் இயக்குகிறார். பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
மேலும் இப்படத்தில் அரவிந்த் சாமி இப்படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை பூர்ணா சசிகலா கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சமுத்திரக்கனி ஆர்எம் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தலைவி படத்திற்காக கங்கனா 20 கிலோ வரை உடல் எடையைக் குறைத்துள்ளார். படத்தில் பார்ப்பதற்கு ஜெயலிதாவைப் போலவே தோற்றமளிக்கிறார். படத்தில் இருந்து வெளியாகும் அணைத்து புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தலைவி படத்திற்கு இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது தலைவி படத்தை வரும் மார்ச் மாதம் 26-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.