வெறித்தனம் செய்துள்ள சமந்தா… ‘தி பேமிலி மேன் 2’ ட்ரைலர் வெளியானது!
தி பேமிலி மேன் வெப் சீரிஸ் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் அதிக வரவேரற்பு பெற்ற வெப் சீரிஸ்களில் ஒன்றாக மாறியுள்ளது தி பேமிலி மேன். எனவே இந்த வெப் சீரிஸின் இரண்டாம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இன்று தி பேமிலி மேன் சீரிஸ் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் இன்று வெளியகியுள்ளது.
இந்த சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடிகை சமந்தா இணைந்துள்ளார். ட்ரைலரில் சமந்தா வெறித்தனமாக நடித்துள்ளார். இரண்டாம் பாகத்தின் பெரும்பாலான பகுதிகள் சென்னையில் நடக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. எனவே சமந்தா ராஜி என்ற கதாபாத்திரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணாக நடித்துள்ளார். தீவிரமாக கும்பலுடன் இணைந்து செயல்படும் ஸ்லீப்பர்செல் ஏஜெண்டாக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ட்ரைலர் முழுவதும் விறுவிறுப்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளுடன் சீரிஸ் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளனர். நடிகை தேவதர்ஷினியும் இந்த வெப் சீரிஸில் நடித்துள்ளார்.
தவிர, மனோஜ் பாஜபாயி, ப்ரியாமணி ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸை ராஜ் மற்றும் டிகே இருவர் இணைந்து இயக்கியுள்ளனர். ஜூன் மாதம் 4-ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் இந்த இரண்டாம் பாகம் அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.