‘பேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் ட்ரைலர் ரிலீஸ் தேதி வெளியானது!

‘பேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் ட்ரைலர் ரிலீஸ் தேதி வெளியானது!

பிரபல பாலிவுட் வெப் சீரிஸானா பேமிலி மேன் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி வெளியானது.

இந்தியில் மனோஜ் பாஜபாயி, ப்ரியாமணி நடிப்பில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான தி பேமிலி மேன் வெப் சீரிஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த வெப் சீரிஸை ராஜ் மற்றும் டிகே இருவர் இணைந்து இயக்கியிருந்தனர்.

‘பேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் ட்ரைலர் ரிலீஸ் தேதி வெளியானது!

தற்போது இந்த வெப் சீரிஸின் இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் இந்த வெப் சீரிஸின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஜூன் மாதம் 11-ம் தேதி முதல் பேமிலி மேன் வெப் சீரிஸ் இரண்டாம் பாகம் அமேசான் ப்ரைமில் இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

‘பேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் ட்ரைலர் ரிலீஸ் தேதி வெளியானது!

தற்போது இந்த வெப் சீரிஸின் ட்ரைலர் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. மே 17-ம் தேதி இந்த வெப் சீரிஸ் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது கூறப்படுகிறது.

இந்த வெப் சீரிஸில் நடிகை சமந்தாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமந்தா இதில் தீவிரவாத கும்பலுடன் இணைந்து செயல்படும் ஸ்லீப்பர்செல் ஏஜெண்டாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சமந்தா அறிமுகமாகும் முதல் வெப் சீரிஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this story