மீண்டும் பிரபல சீரியலில் வனிதா… இல்லத்தரசிகள் உற்சாகம் !

மீண்டும் பிரபல சீரியலில் வனிதா… இல்லத்தரசிகள் உற்சாகம் !

பிரபல சீரியல் ஒன்றில் மீண்டும் நடிக்க இருப்பதாக நடிகை வனிதா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மீண்டும் பிரபல சீரியலில் வனிதா… இல்லத்தரசிகள் உற்சாகம் !

மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். போதிய வாய்ப்பு சினிமாவில் இல்லாததால் திருமணம் செய்துக்கொண்டார். 2 மகள்கள் இருந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார்.

மீண்டும் பிரபல சீரியலில் வனிதா… இல்லத்தரசிகள் உற்சாகம் !

இதையடுத்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக அதிரடியாக நுழைந்து ரசிகர்களிடையே புகழ்பெற்றார். தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த வனிதா, குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர், ஒளிப்பதிவாளர் பீட்டர் பாலை காதலித்து மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணமும் விரைவில் பிரிவில் முடிந்தது.

மீண்டும் பிரபல சீரியலில் வனிதா… இல்லத்தரசிகள் உற்சாகம் !

இந்நிலையில் நடிகை வனிதா, ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் திருமதி ஹிட்லர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மூத்த நடிகை அம்பிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த சீரியலில் தான் இணைந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் வனிதா தெரிவித்துள்ளார்.

Share this story