நயன்தாராவை கலாய்த்து விட்டு எஸ்கேப் ஆன பிரபல காமெடி நடிகர்!

நயன்தாராவை கலாய்த்து விட்டு எஸ்கேப் ஆன பிரபல காமெடி நடிகர்!

மலையாளத் திரையுலக காமெடி நடிகர் அஜு வர்கீஸ் தான் நடித்த ‘லவ் ஆக்சன் ட்ராமா’ படத்தின் படப்பிடிப்பில் நயன்தாராவுடன் உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். லவ் லவ் ஆக்சன் ட்ராமா படத்தில் நிவின்பாலி மற்றும் நயன்தாரா நடித்திருந்தனர். அஜு வர்கீஸ் காமெடியனாக நடித்திருந்தார்.
நயன்தாராவை கலாய்த்து விட்டு எஸ்கேப் ஆன பிரபல காமெடி நடிகர்!
என்னதான் நயன்தாரா தமிழ் படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயரெடுத்து இருந்தாலும், அவர் தனது திரை வாழ்க்கையை தொடங்கியது மலையாளத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அவருக்கு எப்போதும் மலையாள படங்கள் மீது அதீத காதல் உண்டு.
அஜூ வர்கீஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் நயன்தாராவிடம் ஏதோ ஒரு ஜோக் சொல்லி விட்டு அங்கிருந்து தப்பி செல்வது போன்று உள்ளது. அந்த பதிவில் “நான் தப்பித்து விட்டேன்” என்று எழுதியுள்ளார்.

 

View this post on Instagram

 

ഞാൻ മുങ്ങി ?

A post shared by Aju Varghese (@ajuvarghese) on


மலையாளத்தில் மூன்று வருடங்களுக்கு பிறகு நயன்தாரா ரீஎன்ட்ரி கொடுத்த படம் தான் லவ் ஆக்சன் ட்ராமா. ஸ்ரீனிவாசன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மலையாள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Share this story