‘சலார்’ படத்தில் ஷ்ருதி ஹாசன் இந்தக் கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறாராம்!

‘சலார்’ படத்தில் ஷ்ருதி ஹாசன் இந்தக் கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறாராம்!

நடிகர் பிரபாஸ் தற்போது கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் சலார் என்ற பிரம்மாண்டப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இந்தியா ழுழுதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சலார் படத்தில் நடிகை ஷ்ருதி ஹாசன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக முதலில் கூறப்பட்டது.

அதையடுத்து, ஷ்ருதி ஹாசன் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும், சிறிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.

‘சலார்’ படத்தில் ஷ்ருதி ஹாசன் இந்தக் கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறாராம்!

இந்நிலையில், ஷ்ருதி ஹாசன் சலார் படத்தில் பத்திரிகை நிருபராக நடிக்க இருப்பதாக டோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தப் படத்தில் அவருக்கு முக்கியக் கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஷ்ருதி ஹாசன் ஏற்கனவே ‘சிங்கம் 3’ படத்தில் பத்திரிகையாளராக நடித்திருந்தார். தற்போது சலார் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக பத்திரிகையாளராக நடிக்கிறார்.

‘சலார்’ படத்தில் ஷ்ருதி ஹாசன் இந்தக் கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறாராம்!

இந்தத் திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது. கன்னட நடிகர் மது குருசாமி சலார் படத்தில் வில்லனாக நடிக்கிறார். கேஜிஎப் இயக்குனர் மற்றும் பாஹுபலி நடிகரின் கூட்டணி என்பதால் படத்திற்கு இமாலய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Share this story