அமீர் கான் படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி… இதுதான் காரணமாம்!
விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமா மட்டுமல்ல இந்தியா சினிமாவிலும் மிகமுக்கிய நடிகராக மாறியுள்ளார்.
விஜய் சேதுபதி பாலிவுட்டில் அமீர் கான் நடிப்பில் உருவாகி வரும் லால் சிங் சத்தா படத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. விஜய் சேதுபதி பாலிவுட்டில் அறிமுமாகும் முதல் படமாகவும் அது கருதப்பட்டது. அமீர் கானே விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்க பரிந்துரை செய்துள்ளார். நேரில் சென்னை வந்து விஜய் சேதுபதியிடம் கதையை விவரித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் விஜய் சேதுபதி அப்படத்திலிருந்து விலகியதாகத் தெரிவிக்கப்பட்டது. பல படங்களில் கமிட் ஆகியுள்ளதால் இந்தப் படத்தின் தேதிகள் சற்று இடையூறாக இருக்கவே அப்படத்திலிருந்து விலகியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அப்படத்திலிருந்து விலகிய பிறகு தனக்கு அமீர் கான் மீது மிகுந்த மரியாதை இருப்பதாகவும் வருங்காலத்தில் அவருடன் சேர்ந்து படங்கள் நடிக்க விருப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் எந்த இயக்குனர் விஜய் சேதுபதியிடம் கதை சொல்லப் போனாலும் குறைந்தது இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டுமாம். ஏனெனில் அந்தளவிற்கு கையில் பல படங்களை குவித்து வைத்துள்ளாராம். மிகக்குறுகிய காலத்தில் அதிக படங்கள் நடித்த நடிகர் என்று கின்னஸ் சாதனை படைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.