‘துக்ளக் தர்பார்’ படத்துக்கு கடும் எதிர்ப்பு… திரையிட விடமாட்டோம் என எச்சரிக்கை

‘துக்ளக் தர்பார்’ படத்துக்கு கடும் எதிர்ப்பு… திரையிட விடமாட்டோம் என எச்சரிக்கை

துக்ளக் தர்பார் படத்தின் சர்ச்சை காட்சிகளை நீக்கவேண்டும் படக்குழுவுக்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

‘துக்ளக் தர்பார்’ படத்துக்கு கடும் எதிர்ப்பு… திரையிட விடமாட்டோம் என எச்சரிக்கை

விஜய் சேதுபதி நடித்து வெளிவரவிருக்கும் படம் துக்ளக் தர்பார். தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கும் இப்படத்தில் நடிகர் பார்த்திபன், மஞ்சுமா மோகன், ராஷி கண்ணா, கருணாகரன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

‘துக்ளக் தர்பார்’ படத்துக்கு கடும் எதிர்ப்பு… திரையிட விடமாட்டோம் என எச்சரிக்கை

இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் நேற்று படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் கலந்த காமெடிப்படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் ராசிமான் என்ற கதாபாத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, போஸ்டர்களை கிழிப்பது போன்று ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

‘துக்ளக் தர்பார்’ படத்துக்கு கடும் எதிர்ப்பு… திரையிட விடமாட்டோம் என எச்சரிக்கை

இதனால் கடும் கோபமடைந்த நாம் தமிழர் கட்சியினர், கட்சித்தலைவர் சீமானை கிண்டல் செய்வது போன்று இந்த காட்சி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த காட்சிகளால் தாங்கள் மனம் வருத்தமடைந்துள்ளதாகவும், அதை உடனே நீக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். இதை நீக்காவிட்டால் படத்தை திரையிட விடமாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரிடம் கேட்டபோது, இது தெரியாமல் நடந்த தவறு, அதனால் அந்த காட்சிகளை நீக்கிவிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Share this story