கலைமாமணி விருது அறிவிப்பு…பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, சிவகார்த்திகேயன் தேர்வு….
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் கலைமாமணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்படுவது வழக்கம்.இந்த விருதுகள் திரைத்துறை மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன், ராமராஜன், சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி, யோகிபாபு உள்பட 42 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. மேலும் நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர்கள் டி இமான், தீனா, பாடகர்கள் சுஜாதா, அனந்து, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ் ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இயக்குனர்கள் கவுதம் மேனன், லியாகத் அலிகான், மனோஜ் குமார், ரவி மரியா ஆகிய நால்வருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படவுள்ளது.