வைரலாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நீக்கப்பட்ட காட்சி...
எஸ். எஸ். ராஜமௌலி ஒரு தெலுங்கு திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உள்ளிட்ட பலர் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படம் தான் ஆர்.ஆர்.ஆர். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி. தமிழ்,தெலுங்கு, ஹிந்தி உள்பட 5 மொழிகளில் வெளிவந்து ரூ. 1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளை பெற்றது. இந்தநிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நீக்கப்பட்ட காட்சி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இந்த காட்சியில் ராம் சரண் இடம் பெற்றிருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகின்றது.இதைத்தொடர்ந்து நேற்று, சினிமாவில் ராஜமௌலியின் பங்களிப்பை கூறும் விதமாக, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிலிம் கம்பானியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த மார்டர்ன் மாஸ்டர்ஸ் என்ற ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ALLURI SEETHA RAMARAJU 🔥🔥
— koti (@koti7711) August 2, 2024
Unseen footage of #RamCharan from #RRRMovie 💥💥#RRR #GameChanger@AlwaysRamCharan @ssrajamouli pic.twitter.com/ZYt05P7NKX