பரபரப்பு சம்பவம்... பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பில் 3 பேர் பலி!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் நகரில் இன்று மதியம் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பெங்களூரு போக்குவரத்து துறைக்கு அருகில் உள்ள வாகனங்கள் பழுது பார்க்கும் கடை அருகே இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தில் அந்த வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் இருந்த இருவர் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குண்டு வெடிப்பு பற்றி விசாரணை நடத்திய போலீசார் அதில் பழுது பார்க்கும் கடை பணியாளர்கள் உடலை அடையாளம் கண்டுள்ளனர். வெடிமருந்துகளை இடம் மாற்றம் செய்யும் போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்றும் குண்டுவெடிப்பில் வெடித்த பொருள் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அடுத்த கட்ட விசாரணையில் குண்டுவெடிப்பில் மூலகாரணம் கண்டறியக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.