உருமாறிய கொரானாவின் புதிய அறிகுறிகள்.. எச்சரிக்கும் மருத்துவ வல்லுநர்கள்

கொரானாவின் புதிய வகை தொற்றின் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரானாவின் மூன்றாம் அலை அக்டோபர் மாதம் பாதிக்கு மேல் தொடங்கி நவம்பருக்கு உச்சம் பெறும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முதல் அலையின்போது பாதிப்பு குறைவாகவே இருந்தாலும், இரண்டாவது அலையின் தாக்கம் இன்றளவும் எதிரொலித்து வருகிறது. ஒருபக்கம் கொரானா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தப்போதிலும், இன்னொரு பக்கம் தடுப்பூசிப்போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரானா தொற்று அதிகரித்து வருவது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.
முதல் அலையின்போது இருமல், சளி, காய்ச்சல் ஆகியவை அறிகுறிகளாக இருந்தன. அடுத்து 2-வது அலையில் உடல்சோர்வு, உடல் வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை புதிய அறிகுறிகளாக தோன்றின. இந்நிலையில் மூன்றாவது அலைக்கான அறிக்குறிகள் எப்படி இருக்கும் என்பதை கோவிட் 19 டாஸ்க் ஃபோர்சில் உள்ள டாக்டர் ராகுல் பண்டிட் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியின்போது தெரிவித்துள்ளார்.
வழக்கமான கொரானாவின் முக்கிய அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல், தொண்டைக்கட்டு, மூச்சுத் திணறல் ஆகிய இருந்து வருகிறது. இவை தவிர காது கேளாமை, பயங்கரத் தலைவலி, நாக்கு வறளுதல், எச்சில் ஊறுவதில் குறைவு, இமைப்படல அழற்சி, கண் எரிச்சல், கடுமையான களைப்பு, சருமக்கோளாறுகள் போன்ற அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாக கொரானா பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும் அவர் கூறியுள்ளார். இதனால் பொதுமக்களிடையே பீதி அதிகரித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.