தீண்டாமை கொடூரம்... 2 வயது குழந்தை கோவிலுக்குள் சென்றதால் பெற்றோருக்கு 35 ஆயிரம் அபராதம்!

miyapur-4

தலித் சமூகத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை கோவிலுக்குள் சென்றதால் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள மியபுரா கிராமத்தில்உள்ள கோவிலுக்குள் செல்ல  கோவிலுக்குள் செல்ல பட்டியலின மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் வசித்து வரும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தனது 2 வயது குழந்தைக்கு கடந்த 4ஆம் தேதி பிறந்த நாள் என்பதால் குழந்தையை அனுமன் கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதையடுத்து பெற்றோர் கோவிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்யவே, குழந்தை மட்டும் திடீரென கோவிலுக்குள் ஓடி சாமி கும்பிட்டுள்ளது.



இதைக்கண்ட அப்பகுதி மக்கள் பட்டியலின குழந்தை எப்படி கோவிலுக்குள் செல்லலாம் என்று பெற்றோரிடம் சண்டையிட்டுள்ளனர். பின்னர், கோவிலுக்குள் குழந்தை சென்றதற்காக 25 ஆயிரம் ரூபாய் கோவிலை சுத்தம் செய்ய 10 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

miyapr4

இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எட்டியுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார் கிராமத்தினரை அழைத்து அனைத்து தரப்பினரும் கோவிலுக்குள் செல்லலாம் என்று எச்சரித்துள்ளனர். பின்னர் இது குறித்து போலீசார் தரப்பில், மக்களுக்கு கொடுத்த அறிவுரையின் பேரில் அவர்கள் தவறுகளை உணர்ந்து பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story