"ஃபீல்டில் மார்க்கெட் இல்லை" - டிவி சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு!

கன்னட டிவி சீரியல் நடிகை சௌஜன்யா இன்று தற்கொலை செய்துகொண்டார். பெங்களூருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த சௌஜன்யா இன்று தன்னுடைய அறையிலுள்ள பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த காவல் துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல அவரது அறையில் நான்கு பக்கங்கள் கொண்ட கடிதத்தையும் கண்டுபிடித்துள்ளனர்.
ஆய்வு செய்ததில் அந்தக் கடிதம் சௌஜன்யாவால் எழுதப்பட்டது என தெரியவந்துள்ளது. அதில் ஆங்கிலத்திலும் கன்னடாவிலும் எழுதியுள்ளார். குறிப்பாக தன்னுடைய ஃபீல்டில் மார்க்கெட் இல்லையென்பதால் இந்த தற்கொலை முடிவை எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல சில நாட்களாக அவருக்கு உடல்நிலை சீராக இல்லாமல் இருந்ததாலும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. இருப்பினும் காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050