குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்... இந்த மாவட்டங்களில் மது விற்பனைக்கு தடை - திடீர் உத்தரவு!

மது விற்க தடை

*தேர்தல் நடைபெறும் மாவட்டங்கள்: நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை

*விற்பனைக்கு தடை செய்யப்பட்டிருக்கும் தேதி: அக்டோபர் 4-6, 7-9

தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சி ஒரு பக்கம் எதிர்க்கட்சி மற்றொரு பக்கம் என அனல்பறக்க பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. 6ஆம் தேதி நடைபெறும் முதல் கட்ட வாக்குப்பதிவில் 17,130 காவல்துறையினரும் 3,405 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 9ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 16,006 காவல்துறையினரும் 2,867 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

144 தடை உத்தரவுக்கு முன்பு குமரியில் 6 மணி நேரத்தில் ரூ.6 கோடிக்கு மது  விற்பனை - வழக்கமான நாட்களை விட இருமடங்கு அதிகம்||144 before the injunction  At Kumari at ...

தேர்தலை சுமுகமாக நடத்தும் பொருட்டு, பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அங்கு கூடுதல் போலீசாரை குவிக்க மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மது விற்க தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

மது விற்பனையில் முதலிடம் பிடித்த மதுரை மண்டலம்! எவ்வளவு தெரியுமா? | Tamil  Nadu News in Tamil

முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில் 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினத்தன்றும் மதுக்கடை மற்றும் மதுபான கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Share this story