கொரோனா மரணத்திற்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

corona death

கொரோனா தொற்றை பேரிடராக மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி அறிவித்தது. பேரிடர் மேலாண்மை சட்டப்படி, பேரிடரால் பாதிக்கப்பட்டு பலியானவர்கள் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாயும், ஒரு வாரத்திற்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு 12 ஆயிரத்து 700 ரூபாயும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 60 ரூபாயும், குழந்தைகளுக்கு 45 ரூபாயும் நிவாரண உதவியாக 60 நாட்கள் வரை வழங்க வேண்டும்.

பேரிடர் அறிவிப்பு வெளியிட்ட 45 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என இந்த விதிகளில் கூறப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட தகவல்கள் உள்பட கொரோனா சம்பந்தமான பல்வேறு பிரச்சினைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. முந்தைய விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில், கொரோனா நிவாரணமாக 4 லட்சம் ரூபாய் வழங்கப்பட மாட்டாது என்றது. கொரோனாவுக்கு இழப்பீடு வழங்கிவிட்டு, பிற நோய்களுக்கு அதை மறுப்பது நியாயமற்றதாகி விடும்.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 3320 கொரோனா வைரஸ் வழக்குகள் மற்றும் 95  இறப்புகள் .... | India News in Tamil

சுமார் 4 லட்சம் பேர் இறந்துள்ளதால், இப்போதும் இருக்கும் பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் ஒவ்வொருவருக்கும் 4 லட்சம் கொடுப்பது இயலாத காரியம். பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகளுக்கு மட்டுமே இழப்பீடு பொருந்தும் என்று பேரிடர் மேலாண்மை சட்டம் கூறுகிறது என்று விளக்கிய அரசு, தொற்றுநோய்களின் தீவிரம் காரணமாக கொரோனாவுக்கு அந்த விதிகள் பொருந்தாது என்றது. ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு கட்டாயமாக இழப்பீடு வழங்கியே ஆக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Two women judges in Supreme Court, 78 in High Courts, says law ministry-  The New Indian Express

இன்னும் ஆறு வாரங்களுக்குள் இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அறிக்கையாக தாக்கல் செய்யவும் ஆணையிட்டனர். இச்சூழலில் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், “கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசுகள் ரூ.50 ஆயிரம் வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து மாநில அரசுகள் வழங்கவேண்டும். வரும் காலங்களில் ஏற்படும் கொரோனா உயிரிழப்புகளுக்கும் இந்த இழப்பீடு பொருந்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Fake circular virus infects Union government ministries - India News

இதை தொடர்ந்த தற்போது மத்திய அரசு உள்துறை இணை செயலர் ஆசீஷ்குமார் சிங் அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், "அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கொரோனாவில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும். தொற்று பாதிப்பு தொடங்கிய காலத்தில் இருந்து இறந்தவர்கள் அனைவரின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை இந்த உதவித்தொகை அளிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Share this story