பான் கார்டுதான் ஆதார் கார்டை இணைக்க இந்த மாதம் தான் கடைசி... எஸ்பிஐ அறிவிப்பு!

pan-and-aadhar-44

செப்டம்பர் மாதம் இறுதிக்குள் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து படிப்படியாக அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கார்டுகள் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக பான் கார்டு வைத்திருப்பவர்கள் அதை ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தங்களது வாடிக்கையாளர்கள் அனைவரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தங்களது ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்கவில்லை எனில் பான் கார்டு செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

sbi-and-aadhar-44

உங்கள் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைப்பது சுலபம் தான். 

https://www.incometax.gov.in/iec/foportal/ இந்த இணையதள முகவரிக்குச் சென்று Link Aadhaar ஆப்ஷனைத் தேர்வு செய்து இணைத்துக் கொள்ளலாம். 

எஸ்.எம்.எஸ். மூலமாகவும் நீங்கள் இணைக்கலாம். உங்களுடைய மொபைல் நம்பரிலிருந்து UIDPAN 12 digit Aadhaar 10 digit PAN என டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்.அனுப்பி இணைத்துக் கொள்ளலாம். 

Share this story