15 ஆண்டுகளுக்குப் பிறகு மெகா ஸ்டாருடன் ஜோடி சேரும் த்ரிஷா!

15 ஆண்டுகளுக்குப் பிறகு மெகா ஸ்டாருடன் ஜோடி சேரும் த்ரிஷா!

நடிகை த்ரிஷா, சிரஞ்சீவி நடிக்கும் ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இணைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகை த்ரிஷா தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தற்போது வரையிலும் கதாநாயகியாக பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது த்ரிஷா லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக டோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

15 ஆண்டுகளுக்குப் பிறகு மெகா ஸ்டாருடன் ஜோடி சேரும் த்ரிஷா!

நடிகர் பிருத்விராஜ் லூசிபர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் திரைப்படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்து வாரி குவித்தது. முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக முத்திரை பதித்தார் பிரித்விராஜ்.

அதையடுத்து தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆகவிருக்கிறது. அதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மோகன்லால் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தெலுங்கு ரீமேக்கை இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார்.

மலையாளத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் கிடையாது. ஆனால் தெலுங்கில் சில மாற்றங்கள் செய்துள்ளனர். அதையடுத்து த்ரிஷா இப்படத்தில் இணைந்துள்ளார். த்ரிஷா 15 ஆண்டுகளுக்குப் பிறகு சிரஞ்சீவியுடன் இணைத்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story