ஜிவி பிரகாஷ் படத்தில் வில்லனாக நடிக்கும் கலக்கப்போவது யாரு நடிகர்!

ஜிவி பிரகாஷ் படத்தில் வில்லனாக நடிக்கும் கலக்கப்போவது யாரு நடிகர்!

டி.எஸ்.கே என்றழைக்கப்படும் திருச்சி சரவணகுமார் சன் டிவியில் ஒளிபரப்பான ‘அசத்தப்போவது யாரு’ மூலமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் ஆதித்யா சேனலில் தொகுப்பாளராகப் பணியாற்றினார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் தமிழக பிமக்களிடையே மிகவும் பிரபமாகிவிட்டார்.

ஜிவி பிரகாஷ் படத்தில் வில்லனாக நடிக்கும் கலக்கப்போவது யாரு நடிகர்!


டி.எஸ்.கே சில படங்களிலும் நடித்துள்ளார். தமன்னா நடிப்பில் வெளியான பெட்ரோமேக்ஸ், தனுசு ராசி நேயர்களே, சமீபத்தில் வெளியான இரண்டாம் குத்து ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது டி.எஸ்.கே கோலிவுட்டில் பல பட வாய்ப்புகளைக் குவித்து வருகிறார். டீக்கே என்பவர் இயக்கும் படத்தின் டி.எஸ்.கே முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

“ஐந்து சிறுகதைகள் கொண்ட அந்தாலஜி படமாக உருவாகி வரும் இப்படத்தில் நான் ஒரு பகுதியில் நடிக்கிறேன். இந்த சிறுகதை காமடி ஜேர்னரில் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு நான் இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. இந்தப் படத்தை பார்வையாளர்கள் பார்ப்பதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” டி.எஸ்.கே கூறியுள்ளார்.

ஜிவி பிரகாஷ் படத்தில் வில்லனாக நடிக்கும் கலக்கப்போவது யாரு நடிகர்!

சந்தோஷ் ராஜ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படம், ராஜா சரவணன் இயக்கத்தில் பரத், லோஸ்லியா மற்றும் பூர்னேஷ் ஆகியோர் நடிக்கும் படம் என வரிசையாக பல படங்களைக் கையில் வைத்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் மற்றும் சரத் குமார் நடிப்பில் உருவாகும் படம் பற்றியும் தெரிவித்துள்ளார். “இப்படத்திற்கு ‘அடங்காதே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சண்முகம் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இப்படம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் நான் இதில் வில்லன் கதாபத்திரத்தில் நடித்துள்ளேன்.

என் முகம் நகைச்சுவைக்கு மட்டுமல்ல, வில்லன் கதாபாத்திரங்களுக்கும் பொருந்தும் என்று இயக்குனர் என்னிடம் கூறிய போது நான் அதிர்ச்சியடைந்தேன். அது எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. இந்த படத்தில் எனது கதாபாத்திரம் பாத்திரம் சரத்குமார் சாருக்கு மிகவும் நெருக்கமானது. அவர் ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார், நான் அவருடைய வலது கை.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story