துருவ் விக்ரமின் அடுத்த இயக்குனர் யார் தெரியுமா?

துருவ் விக்ரமின் அடுத்த இயக்குனர் யார் தெரியுமா?

இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து இயக்கும் கர்ணன் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் துருவ் விக்ரமை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆணவப்படுகொலையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ”பரியேறும் பெருமாள்” திரைப்படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் மாரி செல்வராஜ்.

துருவ் விக்ரமின் அடுத்த இயக்குனர் யார் தெரியுமா?

இவர் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் கர்ணன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்தை துருவ் விக்ரமை வைத்து எடுக்கவிருக்கிறார். விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தை பா.ரஞ்சித் தயாரிக்கிறார்

துருவ் விக்ரமின் அடுத்த இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் விக்ரமின் மகன் துருவ், தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ”ஆதித்யா வர்மா” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ”விக்ரம் 60” என்ற படத்தில் நடிகர் விக்ரமுக்கு வில்லனாக நடிக்கிறார். தந்தைக்கு மகன் வில்லனாக நடிக்க இருப்பதால் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாரி செல்வராஜின் படத்தில் துருவ் நடிக்கவிருப்பது எதிர்பார்ப்புகளை மென்மேலும் கூடியுள்ளது.

Share this story