வீடியோ காலில் போட்டோஷூட் : கொரோனா வந்தும் அடங்காத பிரபல நடிகை!
1588842567000
கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் கோமாளி. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவியின் பள்ளி வருடக் காதலியாக நடித்தவர் சம்யுக்தா ஹெக்டே. முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட சம்யுக்தா ஹெக்டே பப்பி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
சம்யுக்தா ஹெக்டே நடிப்பு மட்டுமின்றி வொர்க் அவுட் விஷயத்திலும் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். இதனால் அவ்வபோது புது புது வொர்க் அவுட் வீடியோவை இணையத்தில் வெளியிடுவதை அவர் வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சம்யுக்தா ஒரு போட்டோகிராபருக்கு, வீடியோ கால் போட்டு அதன் மூலமாக அந்த புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன.
[video:https://www.instagram.com/p/B_ryg5PFe1d/?utm_source=ig_web_copy_link]