விவேக் கடைசியாக நடித்து வெளியாக உள்ள படங்கள்!

விவேக் கடைசியாக நடித்து வெளியாக உள்ள படங்கள்!

நடிகர் விவேக் மறைவு தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் நினைவாக மரக்கன்றுகள் நட்டு அவர் நினைவைப் போற்றும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.

விவேக் கடைசியாக ஹரிஷ் கல்யாண் உடன் தாராள பிரபு படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தின் விவேக்கின் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது விவேக் நடிப்பில் வரும் நாட்களில் மூன்று படங்கள் வெளியாக உள்ளன.

விவேக் கடைசியாக நடித்து வெளியாக உள்ள படங்கள்!

விவேக் மறைவதற்கு முன்னர் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நடித்து வந்தார். இமாலய மலைப்பகுதிகளில் படப்பிடிப்புத் தளத்தில் விவேக் இருந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

விஜய் சேதுபதி இயக்கத்தில் அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோஹந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் விவேக் நடித்துள்ளார்.

விவேக் கடைசியாக நடித்து வெளியாக உள்ள படங்கள்!

நீண்ட நாட்கள் கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்ற விவேக்கின் விருப்பம் ‘இந்தியன் 2’ படத்தின் மூலம் நிறைவேறியது. இந்தியன் 2 படத்தில் சிபிஐ அதிகாரியாக விவேக் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. விவேக் தன்னுடைய பகுதிகளை அந்தப் படத்தில் நடித்து முடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்தியன் 2 படத்தின் பிரச்சினைகள் முடிக்கப்பட்டு படம் வெளியானால் விவேக்கை கமல்ஹாசனுடன் பார்க்கலாம். அதற்கு மக்களும் அதிக எதிர்பார்ப்புடன் கார்த்திருக்கின்றனர்.

Share this story