அல்லு அர்ஜுனின் பிரம்மாண்டப் படத்தில் இணைந்த வரலட்சுமி!

அல்லு அர்ஜுனின் பிரம்மாண்டப் படத்தில் இணைந்த வரலட்சுமி!

நடிகை வரலட்சுமி சரத்குமார் இந்திய அளவில் வெளியாகவிருக்கும் அல்லு அர்ஜுனின் படத்தில் இணைந்துள்ளதாக டோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகை வரலட்சுமி, தமிழை விட தெலுங்கில் பிரபலமாகி வருகிறார். தனது கம்பீரமான கதாபாத்திரங்களுக்கு பெயர் போன வரலட்சுமி தெலுங்கிலும் சென்று மிரட்டி வருகிறார். வரலட்சுமி நடிப்பில் தெலுங்கில் சமீபத்தில் வெளியான கிராக் மற்றும் நாந்தி படங்களில் அவரின் நடிப்பு பிரபலமாகப் பேசப்பட்டது. அதையடுத்து அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அல்லு அர்ஜுனின் பிரம்மாண்டப் படத்தில் இணைந்த வரலட்சுமி!

தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் கொரட்டலா சிவா இயக்கத்தில் இந்திய அளவில் உருவாகவிருக்கும் படத்தின் வரலட்சுமி இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படம் வரலாற்றுக் கதை பின்னணியில் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதில் பாலிவுட் நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கொரட்டலா சிவா தற்போது சிரஞ்சீவி நடிப்பில் ‘ஆச்சார்யா‘ படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தை முடித்த பின்னர் இந்தப் படத்தை அவர் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story