வசந்தபாலன் – அர்ஜுன் தாஸ் கூட்டணியில் புதிய படம்… பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்…

வசந்தபாலன் – அர்ஜுன் தாஸ் கூட்டணியில் புதிய படம்… பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்…

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படபூஜை இன்று நடைபெற்றது.

‘அங்காடித்தெரு’,’காவியத்தலைவன்’, போன்ற வெற்றி படங்களை தமிழ் ரசிகர்களுக்கு தந்தவர் இயக்குனர் வசந்தபாலன். இவர் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள படம் ‘ஜெயில்’ இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

வசந்தபாலன் – அர்ஜுன் தாஸ் கூட்டணியில் புதிய படம்… பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்…

இப்படி தொடர்ந்து பல படங்களை இயக்கி வரும் முன்னணி இயக்குநராக உள்ள வசந்தபாலன், தனது அடுத்த படைப்பின் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். அந்தப்படத்தை தனது நண்பர்களுடன் இணைந்து ‘அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அவரே தயாரிக்கவுள்ளார்.

வசந்தபாலன் – அர்ஜுன் தாஸ் கூட்டணியில் புதிய படம்… பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்…

இந்தப் படத்தில் கைதி, அந்தகாரம், மாஸ்டர் படங்களில் நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்ற நடிகர் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் மற்ற நடிகர்கள் தேர்வும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

வசந்தபாலன் – அர்ஜுன் தாஸ் கூட்டணியில் புதிய படம்… பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்…

இந்நிலையில் இந்த படத்தின் படப்பூஜை இன்று நடைபெற்றது. இதில் இயக்குனர் வசந்தபாலன், படத்தின் ஹீரோ அர்ஜுன் தாஸ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் ஷூட்டிங் இன்றே தொடங்கி நடைபெற்று வருகிறது.

Share this story