அஜித் பிறந்தநாளுக்கு ‘மங்காத்தா’ மீண்டும் ரிலீஸ்… வெங்கட் பிரபுவின் கோரிக்கை!

அஜித் பிறந்தநாளுக்கு ‘மங்காத்தா’ மீண்டும் ரிலீஸ்… வெங்கட் பிரபுவின் கோரிக்கை!

அஜித் பிறந்தநாள் அன்று மங்காத்தா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இயக்குனர் வெங்கட் பிரபு கோரிக்கை வைத்துள்ளார்.

தற்போது பழைய படங்களை மீண்டும் ரிலீஸ் செய்யும் கலாச்சாரம் அதிகமாகி வருகிறது. செல்வராகவன் படங்கள் தான் தமிழ்நாட்டில் இந்தக் கலாச்சாரத்தைத் துவங்கி வைத்தன. பொதுவாகவே செல்வராகவன் படங்கள் வெளியாகும் போது வரவேற்பு பெறுவதில்லை. சில ஆண்டுகள் கழித்து தான் அந்தப் படத்தின் பெருமையைப் பேசி அந்தப் படத்தை ட்ரெண்ட் ஆக்குவார்கள் நெட்டிசன்கள். எனவே செல்வராகவனின் படங்களை ரீரிலீஸ் செய்து அவருடைய ரசிகர்கர்களை உற்சாகப்படுத்தினர். இந்த முயற்சி நல்ல வரவேற்பைப் பெறவே பல படங்கள் ரிலீஸ் ஆகத் துவங்கியுள்ளன.

அஜித் பிறந்தநாளுக்கு ‘மங்காத்தா’ மீண்டும் ரிலீஸ்… வெங்கட் பிரபுவின் கோரிக்கை!

அஜித் நடிப்பில் உருவான ‘பில்லா’ திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. சிம்பு நடிப்பில் உருவான ‘மன்மதன்’ படமும் நவீன முறையில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

அந்த வரிசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ‘மங்காத்தா’ படமும் தியேட்டர்களில் மீண்டும் ரிலீஸ் செய்ய வெங்கட் பிரபு கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தயா அழகிரி சார், வர மே 1-ம் தேதி தல 50-வது பிறந்தநாள். அதனால நம்ம தல’யோட 5–வது படமான மங்காத்தா படத்தை உங்களோட செல்வாக்கைப் பயன்படுத்தி ஏப்ரல் 30-ம் தேதி ரீரிலீஸ் பண்ணா அவருடைய ரசிகர்கள் நாங்க உங்களுக்கு கடமைப்பட்ருப்போம். பாத்து செய்யுங்க” என்று தெரிவித்துள்ளார்.

எனவே அஜித்தின் 50-வது பிறந்தநாளுக்கு அவரின் 50-வது படமான மங்காத்தா படம் ரிலீஸ் ஆகலாம் என்று அதிகளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story