“எனக்கே டெனட் கதை புரியல”… மாநாடு டீசருக்கு வந்த கருத்துக்களுக்கு வெங்கட் பிரபுவின் அசத்தல் பதில்!

“எனக்கே டெனட் கதை புரியல”… மாநாடு டீசருக்கு வந்த கருத்துக்களுக்கு வெங்கட் பிரபுவின் அசத்தல் பதில்!

‘மாநாடு’ டீசருக்கு எதிராக எழுந்து வந்த கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் முற்றிலும் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இப்படத்தில் மேலும் கல்யாணி ப்ரியதர்ஷன் எஸ்ஜே சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

“எனக்கே டெனட் கதை புரியல”… மாநாடு டீசருக்கு வந்த கருத்துக்களுக்கு வெங்கட் பிரபுவின் அசத்தல் பதில்!

சில தினங்களுக்கு முன்பு வெளியான மாநாடு படத்தின் டீசரில் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும் பின்னோக்கி செல்வது மாதிரியும், சிம்பு மட்டும் முன்னோக்கி செல்வதாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதையடுத்து டீசரைப் பார்த்த பலரும் இது கிறிஸ்டோபர் நோலனின் டெனட் படம் போலவே இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வந்தனர்.

தற்போது வெங்கட் பிரபு அந்த கருத்துக்களுக்கு விளக்கம் தெரிவிக்கும் வகையில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “மக்கள் எங்கள் மாநாடு டீசரை டெனட் படத்துடன் ஒப்பிடுகிறார்கள் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாநாடு டீசருக்கும் டெனெட் படத்திற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. உண்மையாக சொல்லப்போனால் எனக்கே டெனட் படம் புரியவில்லை. எங்கள் டிரெய்லருக்காக காத்திருங்கள்! அதற்கு பிறகு வேறு படங்களுடன் அதை நீங்கள் ஒப்பிடலாம்” என்று தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபுவின் இந்த நகைச்சுவையான கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story