"விஜய் படத்துக்கு ஸ்கிரிப்ட் வேலை தொடங்கியாச்சு"… உண்மையை வெளிப்படுத்திய வெற்றிமாறன்!

"விஜய் படத்துக்கு ஸ்கிரிப்ட் வேலை தொடங்கியாச்சு"… உண்மையை வெளிப்படுத்திய வெற்றிமாறன்!

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் தோல்வியே காணாத வெற்றி இயக்குனர் என்றே சொல்லலாம். இவரது அழுத்தமான கதைகளுக்காக தற்போது உலகளவில் அறியப்படும் ஒரு இயக்குனராக மாறியுள்ளார். நடிகர் தனுஷை வைத்து இவர் இயக்கிய படங்கள் தான் அதிகம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான அசுரன் படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றி பற்றி அனைவர்க்கும் தெரியும்.
"விஜய் படத்துக்கு ஸ்கிரிப்ட் வேலை தொடங்கியாச்சு"… உண்மையை வெளிப்படுத்திய வெற்றிமாறன்!
தற்போது வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. சூர்யாவை வைத்து வாடிவாசல் எடுக்கப்போவதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் சூரியை வைத்து தான் அடுத்த படம் எடுக்கபோவதகவும் கூறப்படுகிறது.
அசுரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறன் நடிகர் விஜயை சந்தித்தாகக் கூறப்படுகிறது. மேலும் இவர்கள் கூட்டணியில் தளபதி 65 படம் உருவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அது உறுதியாகவில்லை. வெற்றிமாறன் எப்போது விஜயை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பி கோலிவுட் வட்டாரத்தில் அதிகம் நிலவி வருகிறது.
"விஜய் படத்துக்கு ஸ்கிரிப்ட் வேலை தொடங்கியாச்சு"… உண்மையை வெளிப்படுத்திய வெற்றிமாறன்!
வெற்றிமாறன் சமீபத்திய பேட்டியில், எதிர்காலத்தில் விஜய்யுடன் சேர்ந்து படம் பண்ணுவது குறித்து பேசியுள்ளார். விஜய் நடிக்கும் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளைத் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் அழைப்பிற்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே எதிர்காலத்தில் இந்தக் கூட்டணியில் ஒரு ப்ளாக்பஸ்டர் படம் கன்ஃபார்ம்.

Share this story

News Hub