வெற்றிமாறன் படத்தில் கௌதம் மேனனுக்கு என்ன ரோல் தெரியுமா ?…

வெற்றிமாறன் படத்தில் கௌதம் மேனனுக்கு என்ன ரோல் தெரியுமா ?…

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் தனது அடுத்த படைப்பான விடுதலை படத்தை விறுவிறுப்பாக உருவாக்கி வருகிறார். அசுரன் படத்தின் வெற்றிக்கு பிறகு இந்த படம் வரவிருப்பதால், பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகும் இந்த படத்தில் சூரி ஹீரோவாக நடிக்கிறார். சூரியுடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் கூடத்தான் செய்கிறது. இளையராஜா இசை இந்தப் படத்திற்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.

வெற்றிமாறன் படத்தில் கௌதம் மேனனுக்கு என்ன ரோல் தெரியுமா ?…

நடிகர் கிஷோர் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சத்தியமங்கலம் காடுகளில் கடும் குளிரில் படமாக்கப்பட்டு வந்ததது. தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதில் சூரி போலீசாகவும் கைதியாக விஜய் சேதுபதியும் இடம்பெற்றிருந்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

வெற்றிமாறன் படத்தில் கௌதம் மேனனுக்கு என்ன ரோல் தெரியுமா ?…

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இணைந்துள்ளார் என்பது தெரிந்த விஷயம். இவர் எந்த கேரக்டரில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் கௌதம் மேனன் போலீஸ் உயரதிகாரியாக நடிக்க உள்ளராம். இந்த படம் முழுவதும் சூரியுடன், கௌதம் மேனன் இருப்பார் என கூறப்படுகிறது.

Share this story