விஜய் 65 ஷூட்டிங் எப்போது ? … சூடுபறக்கும் அப்டேட்…

விஜய் 65 ஷூட்டிங் எப்போது ? … சூடுபறக்கும் அப்டேட்…

விஜய் நடிக்கும் 65வது படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் 65 ஷூட்டிங் எப்போது ? … சூடுபறக்கும் அப்டேட்…

சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்கியுள்ளார் நெல்சன். படத்தின் பணிகள் அனைத்து முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம்  வரும் மார்ச் 26-ம் தேதி திரையரங்கில் வெளியாகுகிறது. இந்த படத்தின் வெளியீட்டு பணிகள் நடைபெற்று வருவதால் தற்போது அந்த வேலைகளில் மும்மரமாக இருக்கிறார் நெல்சன்.

விஜய் 65 ஷூட்டிங் எப்போது ? … சூடுபறக்கும் அப்டேட்…

டாக்டர் ரிலீசுக்கு பிறகு விஜய் 65 படத்தை இயக்குகிறார் நெல்சன். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. அனிரூத் படத்திற்கு இசையமைக்கிறார். இதுதவிர விஜய் 65 குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. ரசிகர்களும் இந்த படத்தின் அப்டேட் எப்போது வரும் காத்திருந்த நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் 65 ஷூட்டிங் எப்போது ? … சூடுபறக்கும் அப்டேட்…

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்தவுடன் வரும் ஏப்ரலில் விஜய் 65 படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. 60 நாட்களில் இந்த படத்தின் ஷூட்டிங்கை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளார். இதனால் விஜய் 65 படம் வரும் தீபாவளிக்கு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

Share this story