தளபதி 65-க்கு ஹீரோயின் ரெடி..பரப்பரக்கும் நியூ அப்டேட்…

தளபதி 65-க்கு ஹீரோயின் ரெடி..பரப்பரக்கும் நியூ அப்டேட்…

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்நிலையில், ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தளபதி 65-க்கு ஹீரோயின் ரெடி..பரப்பரக்கும் நியூ அப்டேட்…

தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தளபதி 65-க்கு ஹீரோயின் ரெடி..பரப்பரக்கும் நியூ அப்டேட்…

இதையடுத்து, பிரபல தெலுங்கு நடிகையான பூஜா ஹெக்டேயிடம் தளபதி 65 படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்என தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி 65-க்கு ஹீரோயின் ரெடி..பரப்பரக்கும் நியூ அப்டேட்…

இவர் ஏற்கனவே தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். நடிகை பூஜா ஹெக்டே பிரபாஸுடன் நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

Share this story