நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகும் விஜய்!?

நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகும் விஜய்!?

ஒரு புதிய படத்தின் மூலம் விஜய் தெலுங்கிலும் என்ட்ரி கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக விஜய் தெலுங்கு இயக்குனர் அனில் ரவிப்புடி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. விஜயின் கடைசி சில படங்கள் தெலுங்கு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. எனவே டோலிவுட்டில் விஜயின் மார்க்கெட் உயர ஆரம்பித்துள்ளது. எனவே தான் தெலுங்கு இயக்குனருடன் விஜய் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

தற்போது விஜய் நேரடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கார்த்தி மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் வெளியான ‘தோழா’ படத்தை இயக்கிய வம்சி படைப்பள்ளி இயக்கத்தில், விஜய் நடிக்க உள்ளாராம். இந்தப் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகும் விஜய்!?

தற்போது விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். கொரோனா அச்சுறுத்தலை அடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்க உள்ளது.

Share this story