அஜித் படத்தில் நடிக்கும் விஜயின் தோழி!

அஜித் படத்தில் நடிக்கும் விஜயின் தோழி!

‘மாஸ்டர்’ படத்தின் விஜயின் தோழியாக நடித்த நடிகை சங்கீதா அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தில் வருகிறார். மேலும் அவர் வலிமை படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

அஜித் படத்தில் நடிக்கும் விஜயின் தோழி!

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் இப்படத்தைத் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜ இசையமைக்கிறார். 2019-ம் ஆண்டே இப்படம் தொடங்கப்பட்டாலும் தற்போது வரை அதிகார்பூர்வமாக படம் எந்த நிலையில் உள்ளது என்ற அப்டேட் ஏதும் படக்குழு வெளியிடவில்லை.

அஜித் படத்தில் நடிக்கும் விஜயின் தோழி!

தற்போது மாஸ்டர் படத்தில் விஜயின் தோழியாகவும் மருத்துவராகவும் நடித்திருந்த நடிகை சங்கீதா, வலிமை படத்திலும் நடித்து வருகிறாராம். மேலும் “வலிமை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90 சதவீதம் வரை நிறைவடைந்துவிட்டது. கூடிய விரைவில் படம் குறித்த அப்டேட் வெளியாகும். படத்தில் அஜித் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் ஹெச்.வினோத் உடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story