மாஸ்டர் ட்ரெய்லர் குறித்து விஜய் சேதுபதி சொன்ன மாஸான தகவல்…

மாஸ்டர் ட்ரெய்லர் குறித்து விஜய் சேதுபதி சொன்ன மாஸான தகவல்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும்  மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, விஜே ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.  அனிருத் இசையமைத்திருக்கிறார்.
மாஸ்டர் ட்ரெய்லர் குறித்து விஜய் சேதுபதி சொன்ன மாஸான தகவல்…
ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியே படம் ரிலீஸாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது..  போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. கொரோனா பிரச்னை முடிவடைந்து நிலைமை சீரானவுடன் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசருக்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கும் சூழலில், படத்தில் நடித்த பிரபலங்கள் ஒவ்வொருவரும் ட்ரெயிலரை தாங்கள் பார்த்து விட்டதாக கூறி வருகின்றனர்.
மாஸ்டர் ட்ரெய்லர் குறித்து விஜய் சேதுபதி சொன்ன மாஸான தகவல்…
சமீபத்தில் மாஸ்டர் ட்ரெயிலரை பார்த்த நடிகர் அர்ஜூன் தாஸ் ட்ரெயிலர் மாஸாக இருப்பதாக கூறினார்.  நடிகர் சாந்தனு ட்ரெய்லரை தன்னால் பார்க்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார். அந்த வரிசையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள விஜய் சேதுபதி, மாஸ்டர் ட்ரெய்லர் குறித்து கூறியிருக்கிறார்.. மாஸ்டர் ட்ரெய்லரை தான் பார்த்து விட்டதாகவும், மிகவும் நன்றாக வந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதோடு, இது தளபதி ரசிகர்கள் அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும் எனவும் கூறியுள்ளார்..
 

Share this story