விஜய் சேதுபதியுடன் துருவ் விக்ரம் – வைரலாகும் படம்!

விஜய் சேதுபதியுடன் துருவ் விக்ரம் – வைரலாகும் படம்!

விஜய் சேதுபதியுடன் துருவ் விக்ரம் இணைந்து இருக்கும் செல்பி புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதியுடன் துருவ் விக்ரம் – வைரலாகும் படம்!

‘ஆதித்யா வர்மா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே ஹிரோவாக அறிமுகமானவர் துருவ் விக்ரம். பிரபல நடிகர் விக்ரமின் மகனான இவர், இளைஞர்களின் கனவு நாயனாக வலம் வருகிறார். தமிழ் திரையுலகில் இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது. அதனால் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளது.

விஜய் சேதுபதியுடன் துருவ் விக்ரம் – வைரலாகும் படம்!

தற்போது துருவ் விக்ரம், தனது தந்தையுடன் இணைந்து முதல்முறையாக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். விக்ரமின் 60வது படமான இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சின்ஹா, சனந்த் ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது. செவன் ஸ்கிரீன் பிரொக்ஷன் சார்பில் லலித்குமார் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் துருவ் இடம்பெற்றிருக்கிறார். இந்த புகைப்படம் குறித்து பதிவிட்டுள்ள துருவ், ‘இந்த அழகான மனிதரை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

Share this story