ராணா- விஷ்ணு விஷால் கூட்டணியின் ‘காடன்’ பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ்… படக்குழு உறுதி!

ராணா- விஷ்ணு விஷால் கூட்டணியின் ‘காடன்’ பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ்… படக்குழு உறுதி!

ராணா மற்றும் விஷ்ணு விஷால் நடித்துள்ள காடன் திரைப்படம் பொங்கல் தேதியில் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி மற்றும் விஷ்ணு விஷால் இருவரது நடிப்பில் ‘காடன்’ படம் உருவாகியுள்ளது. காடன் படத்தில் மிகவும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராணா இந்த படத்திற்காக வருடக்கணக்கில் செலவழித்துள்ளார். விஷ்ணு விஷால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் யானை பாகனாக நடித்துள்ளார். நாயகியாக ஜோயா நடித்துள்ளார்.

ராணா- விஷ்ணு விஷால் கூட்டணியின் ‘காடன்’ பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ்… படக்குழு உறுதி!

ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தினமும் 20 யானைகளை வைத்து முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் 40 நாட்கள் நடைபெற்றது. பின்பு உன்னி என்ற யானையை வைத்து கேரளாவில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. பின்பு, புனேவில் உள்ள சதாரா, மும்பை பிலிம் சிட்டி, காரகர் என தொடர்ந்து 70 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். பெரும் காடுகள், மலைகள் என கஷ்டப்பட்டு பல காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. அவை அனைத்துமே திரையரங்கில் பார்த்தால் மட்டுமே, அதன் பிரம்மாண்டம் தெரியும். திரையரங்கில் மட்டுமே வெளியாகும். இந்தப் படத்துக்காக காடுகளின் இயற்கை ஒலி படத்துக்கு முதுகெலும்பாக இருப்பதால் ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி ‘காடன்’ படத்துக்கு ஒலியை வடிவமைத்துள்ளார்.

ராணா- விஷ்ணு விஷால் கூட்டணியின் ‘காடன்’ பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ்… படக்குழு உறுதி!

இந்தப் படம் தெலுங்கில் ‘ஆரண்யா’ என்ற பெயரில் வெளியிடப்பட இருக்கிறது. ஹிந்தியில் ‘ஹாதி மேரா சாதி’ என்ற பெயரில் வெளியாகிறது. படம் ரிலீஸ் குறித்து பல செய்திகள் உலவி வந்தது. ஓடிடி தளங்களில் வெளியாக இருப்பதாகவும் வதந்திகள் பரவி வந்தன.

ராணா- விஷ்ணு விஷால் கூட்டணியின் ‘காடன்’ பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ்… படக்குழு உறுதி!

தற்போது படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள விஷ்ணு விஷால் “இன்று உலகம் ஒரு கொடிய தொற்றுநோயை எதிர்த்து போராடும் அதே வேளையில், நம் காடுகள் நீண்ட காலமாக பெருகி வரும் வரும் மனித அத்துமீறலை எதிர்த்துப் போராடுகின்றன! இது எப்போது நிறுத்தப்படும்!? பொங்கல் 2021-ல் காடன் திரைப்படம் தியேட்டரில் பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே விஜயின் மாஸ்டர் படம், சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ஆகியவை பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தற்போது காடன் திரைப்படம் பொங்கலுக்கு தியேட்டர்களில் வெளியாவது உறுதியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

Share this story