எத்தன தடவ பார்த்தாலும் மவுசு குறையல… விஸ்வாசம் படம் நிகழ்த்திய சாதனை!

எத்தன தடவ பார்த்தாலும் மவுசு குறையல… விஸ்வாசம் படம் நிகழ்த்திய சாதனை!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் மற்றும் நயன்தாரா நடித்து வெளியான விஸ்வாசம் திரைப்படம் தமிழ்நாட்டில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. மகளின் பாசத்திற்க்காக ஏங்கும் அப்பாவாக சிறப்பாக நடித்திருந்தார் அஜித். இப்படம் தமிழகத்தில் அனைத்து குடும்பங்களாலும் கொண்டாடப்பட்டது. பின்னர் தொலைக்காட்சிகளில் அடிக்கடி படம் திரையிடப்பட்டு வந்தது. சமீபத்தில் டிவியில் ஒளிபரப்பாகிய விஸ்வாசம் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்று மறுபடியும் சாதனை படைத்துள்ளது.
எத்தன தடவ பார்த்தாலும் மவுசு குறையல… விஸ்வாசம் படம் நிகழ்த்திய சாதனை!
விஸ்வாசம் முதன்முதலில் வெளியிடப்பட்ட போது 18.14 மில்லியன்(1.84 கோடி)பார்வைகளைப் பெற்று சாதனை நிகழ்த்தியது. பின்பு இரண்டாம் முறை ஒளிபரப்பாகிய போது 15.59(1.59 கோடி) மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது. தற்போது மூன்றாம் முறை ஒளிபரப்பப் பட்டபோது 16.12( 1.61 கோடி) மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று டிஆர்பி-யில் முதலிடம் பிடித்துள்ளது.
எத்தன தடவ பார்த்தாலும் மவுசு குறையல… விஸ்வாசம் படம் நிகழ்த்திய சாதனை!
ஒவ்வொரு முறை விஸ்வாசம் ஒளிபரப்பப்படும் போதும் முதல் முறை பார்ப்பது போலவே மக்கள் அதிக வரவேற்பு கொடுக்கிறார்கள் இந்தப் படத்திற்கு! வெள்ளித் திரையில் சாதனை நிகழ்த்திய விஸ்வாசம் தற்போது சின்னத்திரையிலும் சாதனை நிகழ்த்தி வருகிறது

Share this story