சம்யுக்தாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் விஜய் டிவி பிரபலம்!

சம்யுக்தாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் விஜய் டிவி பிரபலம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என்று போட்டியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆண்டவர் வழக்கம் போல வந்து, போட்டியார்களை வறுத்தெடுத்துவிட்டு நான்கு கருத்துக்களைத் தூவிவிட்டு ஒருவரை வெளியே அனுப்புவார்.

இந்த வார எலிமினேஷனுக்கு பாலா, சனம், நிஷா, ஆரி, ஜித்தன் ரமேஷ், அனிதா, சோம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அனிதா பிக்பாஸ் கொடுத்த பாஸைப் பயன்படுத்தி எஸ்கேப் ஆகிவிட்டார். பின்னர் சம்யுக்தாவை நாமினேட் செய்தார்.

சம்யுக்தாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் விஜய் டிவி பிரபலம்!

ஜித்தன் ரமேஷ் தான் இந்த வாரம் வெளியேறப் போகிறார் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது.

சம்யுக்தா பெயரும் நாமினேஷனில் இருப்பதால் அவருக்கு ஆதரவாக விஜே பாவனா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாவனாவும், சம்யுக்தாவும் நெருங்கிய தோழி என்பது அனைவர்க்கும் தெரியும். சம்யுக்தவைப் பற்றி சிலர் வெளியிட்ட மோசமானப் பதிவுகளைக் கண்ட பாவனா அதற்கு பதிலளித்து பதிவிட்டுள்ளார்.

“பிக்பாஸ் மாதிரியான நிகழ்ச்சிகளில் போட்டியாளர்கள் ஒருவரின் ஒரு பக்கத்தை தான் காட்டுவார்கள். ஆனால் எனக்கு சம்யுக்தாவை பல வருடங்களாக தெரியும். அவருக்கு மிகவும் நல்ல மனம் கொண்டவர். இந்த போட்டியில் அவர் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் மக்களுக்கும் அவரைப் பற்றி தெரிய வேண்டும். வெறுப்பு வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story