கல்யாணம் எப்போ ? மாப்ளா யார்னு… விஜே ஜாக்லின் சொன்ன ரகசியம் !

கல்யாணம் எப்போ ? மாப்ளா யார்னு… விஜே ஜாக்லின் சொன்ன ரகசியம் !

தனது கல்யாணம் எப்போ என்பதை பிரபல விஜே ஜாக்லின் சூசகமாக கூறியுள்ளார்.

கல்யாணம் எப்போ ? மாப்ளா யார்னு… விஜே ஜாக்லின் சொன்ன ரகசியம் !

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ மூலம் சின்னத்திரையில் நடிகையானவர் ஜாக்லின். இதைத்தொடர்ந்து ஆண்டாள் அழகர் சீரியலில் நடித்தார். பின்னர் 2014ம் ஆண்டு நடந்த ‘கலக்கப்போவது யாரு’ 5வது சீசனை தொகுத்து வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேநேரத்தில் ராக்சனும் இருந்ததால் இருவரும் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தனர். இவர்கள் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததால் ரசிகர்களிடையே பிரபலமானார்கள்.

கல்யாணம் எப்போ ? மாப்ளா யார்னு… விஜே ஜாக்லின் சொன்ன ரகசியம் !

தன்னுடைய கீச்சு குரலால் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவுடன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கோலாமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்தது நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தேன்மொழி சீரியலில் நடித்து வருகிறார். சினிமாவில் அவ்வெப்போது நடித்து வந்தாலும் விஜேவாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் ரசிகர் கேட்ட கேள்விக்கு வீடியோவில் பதிலளித்துள்ளார். அதில் திருமணம் குறித்த கேள்விக்கு “மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கின்றேன், நல்ல மாப்பிள்ளை, அழகான மாப்பிள்ளையாக யாராவது இருந்தால் தயவு செய்து என்னை தொடர்புக்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார். மேலும் தனக்கு ஆல் டைம் ஃபேவரைட் நடிகர் தனுஷ் என்றும், தனுஷ் மட்டுமே என்று ஜாக்லின் குறிப்பிட்டுள்ளார்.

Share this story