மகேஷ் பாபு சொல்வாராம்… விஜய் செய்வாராம்… யாரை ஏமாத்த இந்த பம்மாத்து.!?

மகேஷ் பாபு சொல்வாராம்… விஜய் செய்வாராம்… யாரை ஏமாத்த இந்த பம்மாத்து.!?

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பலருக்கும் இப்போது இருக்கும் பெரும் பிரச்சினையே கன்டென்ட் தேத்திறது எப்படிங்கிறதுதான்.! எப்படா ‘பிரேக்கிங் நியூஸ்’ வரும் என்று காத்திருந்து ஆளாளுக்கு ஒரு ரைட்டப்பைத் தட்டிவிடுவது… லாக்டவுனுக்கு அப்புறம் இது ட்ரெண்டாவே ஆகிடுச்சு.அதுக்கு சமீபத்திய உதாரணம் -கான்ட்ராக்ட்டர் நேசமணி, சில நடிகர்களின் பிறந்தநாள் டிவீட்க்ளின் எண்ணிக்கை… இப்போது ட்ரெண்ட் ஆகி வரும் ‘பசுமை இந்தியா’ சேலஞ்சும் கிட்டத்தட்ட அப்படிதான்.
மகேஷ் பாபு சொல்வாராம்… விஜய் செய்வாராம்… யாரை ஏமாத்த இந்த பம்மாத்து.!?
தற்போது பசுமை இந்தியா என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை அதிகம் காணமுடிகிறது. முன்னணி நடிகர், நடிகைகள் ஒரு செடியை நட்டு அதை அழகாக போட்டோ பிடித்து, மேலும் இரண்டு மூன்று பிரபலங்களையும் அந்த சேலஞ்சை செய்யுமாறு சொல்லிவிட்டுப் போகிறார்கள். அவர்களும் ஒரு செடி நட்டு வைத்து விட்டு மற்ற இரண்டு பேருக்கு சவால் விடுகின்றனர். இந்த மாதிரி செயல்களால் இந்தியா பசுமை ஆகிவிடும் என்று நீங்கள் நம்பினால், ரேஷன் கடையில் மண்ணெணெய் வாங்க வரிசையில் கடைசி நிற்கும் காமன் மேன்களில் நீங்களும் ஒருவரே !
உங்கள் அனைவர்க்கும் தெரிந்திருக்கும், சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் கொண்டாடிய தெலுங்கு ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு, தன் வீட்டு கார்டனில் ஒரு செடியை நட்டு வைத்துவிட்டு இந்தியாவின் பசுமையை மீட்டெடுத்த தோரணையில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். மேலும் விஜய் மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவருக்கும் கூட இந்த சேலஞ்சை விடுத்துவிட்டு வழக்கம் போல தன் வேலையைப் பார்க்க போய்விட்டார்.
மகேஷ் பாபு சொல்வாராம்… விஜய் செய்வாராம்… யாரை ஏமாத்த இந்த பம்மாத்து.!?
இதைப் பார்த்த நம்ம ஆளுங்க, ஒரு டாபிக் கிடைச்ச சந்தோஷத்துல விஜய் இந்த சேலஞ்சை ஏற்பாரா? மாட்டாரா ? என்று விவாத மேடை நடத்தினர்.
இப்ப தான் தளபதி என்ட்ரி. கையில செடியோட மாஸ்-ஆ போஸ் கொடுத்து ஒரு செடியை நட்டு, இந்தியாவ பசுமையா மாத்த என்னைத் தேர்ந்தெடுத்த மகேஷ் காருவுக்கு நன்றி என்றார். மாஸ்டர் அப்டேட் கேட்டு கேட்டு சலித்துப் போன நம் ரசிகர் பெருமக்கள் தற்போது ட்ரெண்ட செய்ய ஒரு அசைன்மென்ட் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் சோசியல் மீடியாக்களில் துள்ளிக் குதித்தனர். எங்கு பார்த்தாலும் ஒரே புகைப்படம் தான்.
Image
இப்ப ரீசெண்டா நம்ம ஸ்ருதி ஹாசன் அவர்களும் சவாலை செய்துவிட்டு மேலும் மூன்று பேருக்கு சவால் விட்டுருக்கிறார். லிஸ்ட் இப்படியே நீண்டு கொண்டே போகும்.
சரி இப்ப விஷயத்துக்கு வருவோம். இந்த பசுமை இந்தியா, பசுமை இந்தியானு சொல்றாங்களே அப்டினு என்னதுங்க(கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன). இந்தியாவில் வறட்சி இல்லாமல் எங்கு பார்த்தாலும் பசுமையாக இருக்க வேண்டும் அல்லவா. அதற்காக பாலைவனத்திலும் புல் முளைக்கவேண்டும் என்றில்லை. நிலப்பகுதிகள் வறண்டு போகாமல் உணவுப்பஞ்சம் இல்லாமல் அனைத்து மக்களுக்கும் மூன்று வேளை ஆரோக்கியமான உணவு கிடைத்தால் தானே உண்மையான பசுமை இந்தியா.
Image
தற்போது நம் நடிகர்கள் எல்லோரும் செடி எங்கு நடுகிறார்கள்? அவர்களின் வீட்டில் உள்ள ஒரு தோட்டத்தில். அதுவும் ஏற்கனவே செழித்து வளமாக இருக்கும் ஒரு இடத்தில தொட்டியில் இருக்கும் செடியை வலுக்கட்டாயமாக எடுத்து நிலத்தில் நட்டு வைத்துவிட்டு பசுமை இந்தியாவை உருவாக்க ஒரு அடி எடுத்து வைத்துவிட்டதாக புளகாங்கிதம் அடைந்துகொள்கின்றனர். இப்படி எல்லாம் செய்தால் இந்தியா பசுமை ஆகிவிடுமா?
மேலும் அவர்கள் நடும் செடிகள் எல்லாமே க்ரோட்டன்(croton plants) வகையைச் சேர்ந்தவை. இந்த வகைச் செடிகள் அழகுக்காக மட்டுமே வளர்க்கப்படுபவை. மற்றபடி இவைகளால் நிலத்திற்கோ, சுற்றுச் சூழலுக்கோ எந்த நன்மையும் கிடையாது. நிலத்தடி நீரையும் மேம்படுத்தாது. உண்மையிலே பசுமையான நிலங்களை உருவாக்க பனைமரம், வேப்ப மரம், புங்கை போன்ற மரங்கள் தான் நம் மண்ணிற்கும் மக்களுக்கும் நன்மை தருபவை. அதை விடுத்து அழகுக்காக க்ரோட்டன் செடிகளை நட்டுவிட்டு பசுமை இந்தியா உருவாக்க முயல்வது சல்லடையில் தண்ணீர் அள்ளி தாகம் தீர்க்கப் போராடுவது போன்ற செயல் தான்.
Croton: How to Grow and Care for Croton Plants | The Old Farmer's ...
நாட்டின் கடைக்கோடிகளில் நீரே பார்க்கமுடியாமல் கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கும் தரிசு நிலத்தையும், கழனி ஆளும் பசுமை நிலமாக மாற்றுவதானே பசுமை இந்தியா. அதை விடுத்து ஏற்கனேவே தொட்டியில் நன்கு வளர்ந்து கொண்டிருக்கும் செடியை பூப்போல எடுத்து வீட்டுக்குள்ளே இருக்கும் தோட்டத்தில் நட்டு வைத்துவிட்டு பசுமை இந்தியா என்று மாயை உருவாக்கும் விளம்பரம் எதற்காக?
பெரிய நடிகர்கள் செய்தால் அவர் ரசிகர்கள் அதைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகி கோடிக்கணக்கான மரங்கள் நட்டு இந்தியாவை உண்மையிலே பசுமை ஆக்கத்தான் இப்படி செய்கிறார்கள். அது தெரியாம பேச வந்துட்டீங்க… என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.
ஆனால் இங்கு… “அப்படியே தளபதியிடம் மாஸ்டர் அப்டேட் வெளியிட சேலஞ்ச் விடுங்க மஹேஷ் காரு” என்று விசிறிகள் கூறி வருவது ஒளிமயமான எதிர்காலத்தைக் கண்ணில் காண்பிக்கிறது.
மகேஷ் பாபு சொல்வாராம்… விஜய் செய்வாராம்… யாரை ஏமாத்த இந்த பம்மாத்து.!?
இப்படி விளம்பரம் தேடாமல் நாட்டு வளத்தை மேம்படுத்த போராடும் இளைஞர்களும், தன்னார்வர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். என்ன, அவர்கள் நெட்டிசன்கள் கண்களுக்குத் தென்படுவதில்லை.
எங்கள் ஸ்டார்கள் செடி வைத்ததைப் பார்த்து எத்தனை பேர் மரம் நட்டிருக்கிறார்கள் பாருங்கள் என்று நீங்கள் புள்ளி விவரங்கள் காண்பித்தால் அதுவும் எங்களுக்கு சந்தோசம் தான். (பசுமை இந்தியா உருவாகிவிட்ட கற்பனை). செடி நட்டா மட்டும் போதாது பாஸ். அது மரம் ஆகணும்! மரம் ஆக்கணும்… அதுதான் உண்மையான பசுமை இந்தியாவிற்காக எடுத்து வைக்கும் பெரும் அடி! வாழ்க பாரதம்!

Share this story