இயக்குனர் சசி படத்திற்காக மும்பை பறந்த ஹரிஷ் கல்யாண்!

இயக்குனர் சசி படத்திற்காக மும்பை பறந்த ஹரிஷ் கல்யாண்!

இயக்குனர் சசி இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக ஹரிஷ் கல்யாண் மும்பை சென்றுள்ளார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார். இவருக்கு பெண் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர் என்பதும் கூடுதல் தகவல்.

இயக்குனர் சசி படத்திற்காக மும்பை பறந்த ஹரிஷ் கல்யாண்!

ஹரிஷ் கல்யாண் கடைசியாக ‘ஓ மணப்பெண்ணே‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். அதைத்தவிர ஹரிஷ் கல்யாண் ‘கசட தபற’ என்ற படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

இயக்குனர் சசி படத்திற்காக மும்பை பறந்த ஹரிஷ் கல்யாண்!

ஹரிஷ் கல்யாண் இயக்குனர் சசி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. தற்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக மும்பை சென்றுள்ளார். மும்பையில் சுமார் 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அவர் மும்பை விமான நிலையத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கின்றனர். படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story

News Hub