மன்மதன் எனக்கு மிகவும் நெருக்கமான படம்… சிம்பு நெகிழ்ச்சி!

மன்மதன் எனக்கு மிகவும் நெருக்கமான படம்… சிம்பு நெகிழ்ச்சி!

‘மன்மதன்’ திரைப்படம் எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான படம் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

2004-ம் ஆண்டு ஏஜே முருகன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் படம் தற்போது நவீன முறையில் மீண்டும் ரிலீஸ் ஆகியுள்ளது.

மன்மதன் எனக்கு மிகவும் நெருக்கமான படம்… சிம்பு நெகிழ்ச்சி!

மன்மதன் படம் வெளியான சிம்புவுக்கு 20 வயது தான். பெண்களைக் காதல் வலையில் விழ வைக்கும் பிளே பாயாக இரு வேடங்களில் மிரட்டியிருந்தார் சிம்பு. அந்தப் படத்தில் இரண்டு பாடல்களையும் சிம்பு பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜோதிகா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது மன்மதன் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்த சிம்பு மன்மதன் படம் தனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான படம் என்று தெரிவித்துள்ளார்.

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து ‘பத்து தல’ என்ற படத்தில் நடிக்கிறார். பின்னர் கவுதம் மேனன் இயக்கத்தில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கிறார்.

Share this story

News Hub