சிறப்புத் தோற்றத்தில் சூர்யா… மாதவன் இயக்கியுள்ள ‘ராக்கெட்ரி’ படத்தின் பட்டையைக் கிளப்பும் ட்ரைலர் வெளியானது!
மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள நம்பி: ராக்கெட்ரி விளைவு திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், 1990-களில் ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டார். அதையடுத்து நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாதவன் தற்போது நம்பி நாராயணின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ராக்கெட்ரி-நம்பி விளைவு என்ற படத்தை நடித்து இயக்கியுள்ளார். இது மாதவன் இயக்கியிருக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலர் அனல் பறக்கும் வசனங்களுடன் புல்லரிக்கும் காட்சிகளுடன் நன்றாக இருக்கிறது. நடிகர் சூர்யா இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். சிம்ரன் மாதவனுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. ரிலீஸ் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.