திடீரென ட்ரெண்ட் ஆகும் ரகுல் ப்ரீத் சிங்… என்ன காரணம்!?

திடீரென ட்ரெண்ட் ஆகும் ரகுல் ப்ரீத் சிங்… என்ன காரணம்!?

ட்விட்டரில் தற்போது ரகுல் ப்ரீத் சிங் என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டிங்கில் இடம் பெற்று வருகிறது. இதற்கு பலர் என்ன கரணம் என்னவென்று தெரியாமல் குழம்பியுள்ளனர்.

தற்போது அதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. ரகுல் ப்ரீத் சிங் மே டே(May Day) என்ற இந்தி படத்தில் நடிக்கஉள்ளாராம். அதனால் தான் பாலிவுட் ரசிகர்கள் ரகுல் ப்ரீத் சிங்கை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

திடீரென ட்ரெண்ட் ஆகும் ரகுல் ப்ரீத் சிங்… என்ன காரணம்!?

ட்ரெண்ட் ஆக்கும் அளவிற்கு அதில் அப்படி என்ன விஷயம் என்று தானே கேட்கிறீர்கள்?

இந்தப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் நடிக்கின்றனர். அது மட்டுமில்லை இந்தப் படத்தை அஜய் தேவ்கனே இயக்கவும் உள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்கும் இந்த செய்தியை உறுதி செய்துள்ளார். அமிதாப் பச்சன் உடன் நடிக்கும் எனது கனவு நனவானது என்றும் தெரிவித்துள்ளார்.

அஜய் தேவ்கன் தயாரிக்கும் இந்தப் படம் டிசம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளது.

Share this story