ஒரு விரல் புரட்சி பாடல்: அதிமுகவுக்கு எதிராக களமிறங்கினாரா விஜய்?

ஒரு விரல் புரட்சி பாடல்: அதிமுகவுக்கு எதிராக களமிறங்கினாரா விஜய்?

சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு விரல் புரட்சி பாடல் அரசியல் போட்டியாக வெளியாகியிருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை: சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள  ஒரு விரல் புரட்சி பாடல் அரசியல் போட்டியாக வெளியாகியிருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இயக்குநர் முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் சர்கார் படத்தின் இரண்டாவது பாடலை இன்று படக்குழுவினர் வெளியிட்டனர். ஒரு விரல் புரட்சி என்று தொடங்கும் இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துப் பாடியிருக்கும் இந்தப் பாடல் ரசிகர்களால் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

தேர்தல் அரசியலை மையப்படுத்தி வெளியாகியுள்ள இந்தப் பாடல் தற்போது இணையத்தில் கவனம்பெற்று வருகிறது. ஏ. ஆர்.ரஹ்மானுடன் ஸ்ரீநிதி வெங்கடேஷ் இணைந்து இதைப் பாடியுள்ளார்.இந்நிலையில் அதிமுக சார்பாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிரமாண்டமாக சென்னையில் நேற்று நடந்தது. அதேபோல அந்த நாளில்தான் தனது அரசியலை ஆழப்படுத்த, தான் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றார் கமல் ஹாசன்.

மக்களின் கவனமும், அரசியல் நிகழ்வும் ஒரே நாளில் நடைபெற்ற இந்த நாளில் போட்டியாக அரசியலை மையப்படுத்திய சர்கார்  பாடல் வெளியிடப்பட்டிருக்குமோ என்ற கேள்வி எழுகிறது.சர்காரின் முந்தைய பாடலான  சிம்டாங்காரன்  இணையத்தளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில்,  ஒரு விரல் புரட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Share this story