கொல்கத்தாவின் “காபரே ராணி” மிஸ் ஷெபாலி உயிரிழப்பு! ரசிகர்கள் அதிர்ச்சி

கொல்கத்தாவின் “காபரே ராணி” மிஸ் ஷெபாலி உயிரிழப்பு! ரசிகர்கள் அதிர்ச்சி

கொல்கத்தாவின் முதல் காபரே நடனக் கலைஞர் ஆரத்தி தாஸ் தான். இவரது உண்மைப் பெயரை விட மிஸ் ஷெபாலி என்னும் மேடைப் பெயரே மிகவும் பிரபலம்

கொல்கத்தாவின் முதல் காபரே நடனக் கலைஞர் ஆரத்தி தாஸ் தான். இவரது உண்மைப் பெயரை விட மிஸ் ஷெபாலி என்னும் மேடைப் பெயரே மிகவும் பிரபலம்

பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன் முதல் தெலுங்கில் உத்தம் குமார் வரை ஷெபாலியின் ஆட்டத்தைக் கண்டு கிறங்கிவிடுவார்கள். 1960, 70 களில் கொல்கத்தாவின் நட்சத்திர இரவுகளால் ஈர்க்கப்பட்ட ஷெபாலி, தனது காபரே நடனத்திற்கும் ஏதுவாக இருக்கும் முடிவெடுத்து கொல்கத்தாவில் தங்கினார்.

கொல்கத்தாவின் “காபரே ராணி” மிஸ் ஷெபாலி உயிரிழப்பு! ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர் சத்யஜித் ரேயின் “சீமபத்தா” மற்றும் “பிரதித்வாண்டி” என்ற பெங்காலி திரைப்படங்களிலும் மிஸ் ஷெபாலி நடித்திருக்கிறார். 

கடந்த ஆண்டு, கொங்கொனா சென் சர்மா மிஸ் ஷெபாலியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு வெப் சீரிஸை இயக்க திட்டமிட்டிருந்தார். இந்த வெப் சீரிஸ் ஷெபாலியின் வாழ்க்கையையும், அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் மேற்கு வங்காளத்தின் அரசியல் சூழலையும் அவரது வாழ்க்கை பயணத்தின் மூலம் விவரிக்கும் என அறிவிக்கப்பட்டது.

கிழக்கு வங்காளத்தின் ஓரு அகதிக் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத்தின்  மூன்று சகோதரிகளில் கடைசியில் பிறந்தவர் ஆரத்தி தாஸ். இவர் தனது 12 வயதிலேயே தன் குடும்ப பாரத்தை  சுமக்க  ஃபிர்போவின் ஹோட்டலில் காபரே நடனம் ஆடத்  தொடங்கினார்.

 “சந்தியா ராட்டர் ஷெபாலி (மாலை மற்றும் இரவுகளின் ஷெபாலி)” என்று பெயரிடப்பட்ட தனது சுயசரிதையை ஷெபாலி எழுதியுள்ளார்.

சிறுநீரக தொடர்பான வியாதிகளுக்கு  சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை காலை 6 மணியளவில் தனது சோடேபூர் இல்லத்தில் வைத்து இயற்கை எய்தினார்.

Share this story