சரவ்தேச திரைப்பட விழாவில் தனுஷின் ‘வடசென்னை’ – வேறெந்த தமிழ்ப் படத்திற்கும் கிடைக்காத அங்கீகாரம்!

சரவ்தேச திரைப்பட விழாவில் தனுஷின் ‘வடசென்னை’ – வேறெந்த தமிழ்ப் படத்திற்கும் கிடைக்காத அங்கீகாரம்!

நடிகர் தனுஷ் நடித்து வெளியிட தயாராக உள்ள ‘வடசென்னை’ திரைப்படத்திற்கு வேறெந்த தமிழ்ப் படத்துக்கும் கிடைக்காத பெருமை கிடைத்துள்ளது.

சென்னை: நடிகர் தனுஷ் நடித்து வெளியிட தயாராக உள்ள ‘வடசென்னை’ திரைப்படத்திற்கு வேறெந்த தமிழ்ப் படத்துக்கும் கிடைக்காத பெருமை கிடைத்துள்ளது.
  
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘வடசென்னை’. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், ராதாரவி உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வடசென்னையை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் வருகிற 17-ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், சீனாவின் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிட இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிங்யாவோ சர்வதேசத் திரைப்பட விழா, நவம்பர் 11-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த விழாவில், 3-ம் நாளன்று ‘வடசென்னை’ படம் திரையிடப்பட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை ‘வடசென்னை’ திரைப்படம் தட்டிச் செல்கிறது. 

Share this story